60 வயதில் 20 வயது இளமை பொலிவு கிடைக்க இந்த பொருட்களை அரைத்து முகத்தில் தடவுங்கள்!!

60 வயதில் 20 வயது இளமை பொலிவு கிடைக்க இந்த பொருட்களை அரைத்து முகத்தில் தடவுங்கள்!!

இன்று பெரும்பாலானோர் இளம் வயதில் முதுமை தோற்றத்தை அடைந்து விடுகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் இரசாயனம் கலந்த பொருட்களை முகத்திற்கு பயன்படுத்துவது தான்.இளம் வயதில் ஏற்படும் முதுமை தோற்றத்தை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)பாதாம் பருப்பு
2)மஞ்சள் தூள்
3)பால்

செய்முறை:-

10 பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு நைஸ் பேஸ்டாக்கி கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு கிண்ணம் எடுத்து அதில் அரைத்த பாதாம் பேஸ்ட்டை போட்டு சிறிது காய்ச்சாத பால் மற்றும் 1/4 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை முகத்திற்கு தடவி 30 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முக வறட்சி நீங்கி அதிக பொலிவுடன் காணப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)சந்தன தூள்
2)பன்னீர்(ரோஸ் வாட்டர்)

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1 1/2 தேக்கரண்டி சந்தன தூள் மற்றும் 2 தேக்கரண்டி பன்னீர் சேர்த்து நன்கு கலக்கி பேஸ்டாக்கி கொள்ளவும்.இதை முகம் முழுக்க தடவி 30 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முக வறட்சி நீங்கி அதிக பொலிவுடன் காணப்படும்.