ஆண்களே உங்கள் பூனை தாடி மீசை புல்லு கட்டுபோல் வளர வேண்டுமா? அப்போ இந்த எண்ணெயை அங்கு தடவுங்கள்!!

Photo of author

By Divya

ஆண்களே உங்கள் பூனை தாடி மீசை புல்லு கட்டுபோல் வளர வேண்டுமா? அப்போ இந்த எண்ணெயை அங்கு தடவுங்கள்!!

நம் தாத்தா காலத்தில் ஆண்களுக்கு தாடி, மீசை கருமையாகவும், அடர்த்தியாகவும் காணப்பட்டது. ஆனால் இன்றைய இளையத் தலைமுறையினருக்கு தாடி, மீசை முடி அடர்த்தியாக வளர்வதில்லை.

இதற்கு ஜீன் அமைப்பு, வாழ்க்கை மற்றும் உணவுமுறை மாற்றம் உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்படுகிறது. இதற்கு இயற்கை முறையில் தீர்வு தேடினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய்

*விளக்கெண்ணெய்

*வைட்டமின் இ மாத்திரை

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி சுத்தமான தேங்காய் எண்ணெய், 1 தேக்கரண்டி விளக்கெண்ணெய் மற்றும் வைட்டமின் இ மாத்திரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இந்த எண்ணெயை இரவு தூங்க போவதற்கு முன் தாடி மற்றும் மீசை முடிகளின் மேல் நன்கு அப்ளை செய்து கொண்டு படுக்கவும்.

மறுநாள் காலையில் எழுந்து முகத்தை நன்கு கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் தாடி மீசை கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரத் தொடங்கும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*கறிவேப்பிலை பொடி

*தேங்காய் எண்ணெய்

*விளக்கெண்ணெய்

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி கறிவேப்பிலை பொடி, 1/2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி விளக்கெண்ணெய் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.