ஒரே மாதத்தில் கூந்தலின் நீளம் இடுப்பிற்கு கீழ் இருக்க வேண்டுமா? அப்போ இந்த மூன்று பொருட்கள் சேர்த்த மூலிகை எண்ணையை யூஸ் பண்ணுங்க!!

0
115
#image_title

ஒரே மாதத்தில் கூந்தலின் நீளம் இடுப்பிற்கு கீழ் இருக்க வேண்டுமா? அப்போ இந்த மூன்று பொருட்கள் சேர்த்த மூலிகை எண்ணையை யூஸ் பண்ணுங்க!!

பெண்களின் அழகை வெளிப்படுத்துவதில் தலை முடி முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்பொழுது நாம் வாழ்ந்து வரும் வாழ்க்கை முறை, உணவு முறை எல்லாம் மாறிவிட்டதால் முடி உதிர்தல், இளநரை உள்ளிட்ட பிரச்சனைகள் சாதாரண ஒன்றாகிவிட்டது.

இதற்காக பல வழிமுறைகளை நாம் மேற்கொண்டாலும் பலன் கிடைத்தபாடு இல்லை. தினமும் ஒரு வழிகளை பின்பற்றி அழுத்துப்போன உங்களுக்கான ஒரு அற்புத மூலிகை எண்ணெய் குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை தயாரிப்பது மிகவும் சுலபம் அதே சமயம் கிடைக்கும் பலன் அதிகம்.

தேவையான பொருட்கள்:-

*கரிசலாங்கண்ணி இலை – 1 கைப்பிடி அளவு

*மருதாணி பூ – 1/2 கப்

*பெரு நெல்லி – 5

*தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்

மூலிகை எண்ணெய் செய்யும் முறை:-

முதலில் 5 பெரு நெல்லிக்காயை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் விதைகளை நீக்கி விட்டு சதைப்பற்றை நிழலில் காயவைத்து உலர்திக் கொள்ளவும். பின்னர் இதை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

அடுத்து 1 கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி இலை சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பிறகு 1/2 கப் மருதாணி பூவை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் அரைத்த கரிசலாங்கண்ணி விழுது, அரைத்து பொடி செய்து வைத்துள்ள பெரு நெல்லிக்காய் மற்றும் 1/2 கப் மருதாணி பூவை சேர்த்து மிதமான தீயில் காய்ச்சவும்.

சேர்த்த பொருட்களின் சாறு தேங்காய் எண்ணெயில் கலக்கும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும். இந்த எண்ணெயை நன்கு ஆற விடவும்.

பிறகு ஒரு பாட்டிலில் தாயார் செய்து வைத்துள்ள மூலிகை எண்ணெயை ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ளவும்.

இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து வருவதன் மூலம் முடி வளர்ச்சி தூண்டி விரைவில் முடி வளரத் தொடங்கும்.

Previous articleKerala Style Recipe: கேரளா பப்பட பஜ்ஜி! இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!!
Next articleஉங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளதா? அப்போ இதை உடனே செய்யுங்கள்!!