நரை முடியை அடர் கருமையாக்க உதவும் ஹேர் ஆயில் – தயார் செய்வது எப்படி?

நரை முடியை அடர் கருமையாக்க உதவும் ஹேர் ஆயில் – தயார் செய்வது எப்படி?

முன்பெல்லாம் 45 வயதை கடந்தால் தான் வெள்ளை நரை தென்பட ஆரமிக்கும். ஆனால் இன்றைய வாழக்கை முறையில் சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் இளநரை பாதிப்பு ஏற்பட தொடங்கி விட்டது.

இளநரை உருவாகக் காரணம்:-

ஆரோக்கியமற்ற உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, இரசாயன பொருட்களை முடிகளுக்கு பயன்படுத்துதல், முடி உதிர்வு, அலர்ஜி, சத்து குறைபாடு.

தேவையான பொருட்கள்:-

*துளசி இலை – 1 கைப்பிடி அளவு

*கிராம்பு தூள் – 1 தேக்கரண்டி

*பிரியாணி இலை – 7

*ஆலிவ் எண்ணெய் – 100 மில்லி

செய்முறை…

1 கைப்பிடி அளவு துளசி இலையை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் இதை ஈரமில்லாமல் உலர்த்தி பொடியாக நறுக்கி கொள்ளவும். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து 1 தேக்கரண்டி அளவு கிராம்பு தூள் மற்றும் பிரியாணி இலையை அதில் சேர்க்கவும்.

தொடர்ந்து 100 மில்லி அளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து 10 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

பின்னர் அடுப்பில் ஒரு அகலமான பாத்திரம் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அதனுள் ஒரு துணியை போட்டு அதன்மேல் துளசி, ஆலிவ் எண்ணெய் ஊற்றி வைத்துள்ள கண்ணாடி பாட்டிலை வைத்து மிதமான தீயில் 20 முதல் 30 நிமிடங்களுக்கு எண்ணெயை காய்ச்சவும். அதாவது டபுள் பாய்லிங் முறையில் காய்ச்சவும்.

பின்னர் அடுப்பை அணைத்து இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். இதை வாரத்திற்கு 3 முறை தலைக்கு பயன்படுத்தி வருவதன் மூலம் நரை முடி விரைவில் கருமையாக மாறும்.