லைசன்ஸ் எடுக்கும் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்!!
தமிழகத்தில் பொதுவாக அரசு அலுவலகம் என்றால் திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிகிழமை நிறைவு பெரும். இதனால் பல பயனாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
தமிழக அரசு அலுவலகங்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகின்றது. அதன் பின் பண்டிகை நாட்களிலும் விடுமுறை வழங்கப்படுகின்றது.
அனைத்து அலுவலகங்களும் இவ்வாறு செயல்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளார்கள் என்பதை கருதி தமிழக அரசானது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் போக்குவரத்து துறை சார்பில் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் இனி ஓட்டுனர் உரிமம் பெற வருகின்ற பொதுமக்களுக்கு சனிக்கிழமையும் அலுவலகம் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை மூலம் அனைத்து ஓட்டுனர் உரிமம் வழங்கும் அலுவலகங்களும் இனி சனிக்கிழமைகளிலும் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையில் ஓட்டுனர் உரிமம் பெறப்பட பொதுமக்கள் வர்வதால் இந்த திடீர் அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தவகையில் இனி சனிக்கிழமைகளிலும் இ சேவை மையங்கள் செயல்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் ஓட்டுனர் உரிமம் பெற வருகின்ற பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அலுவலகங்களும் மற்றும் இ சேவை மையங்களும் தொடர்ந்து சனிக்கிழமைகளிலும் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தாமதமின்றி விரைவில் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.