மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! ஜனவரியில் 13 நாட்களுக்கு பள்ளி விடுமுறை!
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.அப்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.மேலும் தொற்று பாதிப்பு அதிகம் இருந்ததால் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திலும் நேரடி வகுப்பு தொடங்கபட்டது.போக்குவரத்து சேவைகளும் தொடங்கியது.ஆனாலும் மக்கள் அச்சத்துடனே கூட்ட நெரிசல் ஏற்படும் இடங்களுக்கு சென்று வந்தனர்.அப்போது முககவசம்,சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாகத்தான் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது.மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு நடத்தபட்டது.தேர்வு முடிவடைந்த நிலையில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டது.
இந்த தேர்வு விடுமுறை முடிவடைந்த நிலையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி 5 தேதி பள்ளிகள் திறக்கபடுகின்றது.இந்நிலையில் ஜனவரி மாதத்தில் பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை என மாணவர்களுக்கு அதிகளவு விடுமுறை வர உள்ளது.
அந்தவகையில் ஜனவரி மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழமைகள், 4 சனிக்கிழமைகள், பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் என 3 நாட்களும்,ஜனவரி 26 குடியரசு தினத்தன்று 1 நாள் விடுமுறை என மொத்தம் 16 நாட்கள் விடுமுறை வரவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.