ஆண்மையை அதிகரிக்கும் அரியவகை இமாலயன் மூலிகை!! ஒரு கிலோ 17 லட்சம்! ஆட்டைய போட வரும் சீனர்கள்!

0
146

ஆண்மையை அதிகரிக்கும் அரியவகை இமாலயன் மூலிகை!! ஒரு கிலோ 17 லட்சம்! ஆட்டைய போட வரும் சீனர்கள்!

இமயமலை பகுதிகளில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் அடி உயரத்தில் இமாலயன் வயாகரா அல்லது காதல் மலர் என்று அழைக்கப்படும் கார்டிசெப்ஸ் பங்கஸ் என்னும் அரிய வகை மூலிகை வளர்ந்து வருகிறது.இமயமலையின் தங்கம் என்று அழைக்கப்படும் இந்த மூலிகை மிகவும் விலை உயர்ந்தது.தங்கத்தின் விட இதன் மதிப்பு பன்மடங்கு அதிகம்.இந்த மூலிகை பட்டாம்பூச்சியின் கூட்டுப்புழு போன்ற தோற்றம் கொண்டவையால் ஆங்கிலத்தில் இதன்பெயர் கேட்டர்பில்லர் பங்கஸ் என்றும் கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு மிகவும் அதிகம் அதாவது ஒரு கிலோ 10 முதல் 17 லட்சம் வரை விற்கக் கூடியது.2022 ஆம் ஆண்டில் மட்டும் இந்த மூலிகையானது 8,859.81லட்சம் கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

இப்பேற்பட்ட இந்த அரிய வகை மூலிகை தென்மேற்கு சீனாவிலும் உள்ளது.சீனா இந்த மூலிகையை அதிகளவில் உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.

உலகின் மிகப்பெரிய மூலிகை சந்தையாக சீனாவின் குவாங்சோ மற்றும் ஹாங்காங் பகுதிகள் கூறப்படுகிறது.சமீப ஆண்டு காலமாக சீன மூலிகை நிறுவனங்கள் உள்ளூர் வாசிகளுக்கு பல்லாயிரம் கோடி காசுகளை கொடுத்து மலைப் பகுதிகளை ஆக்கிரமித்து இந்த அரிய வகையை மூலிகையை பயிரிட்டு அறுவடை செய்வதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் இதன் விளைச்சல் குறைந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனாலையே தங்கத்தை விட பன்மடங்கு மதிப்புள்ள இந்த மூலிகையை தேடி அருணாச்சல பிரதேசத்தில் சட்டவிரோத ஊடுருவில் சீன வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த தகவலை இந்தோ-பசிபிக் உயர்மட்ட தொலைதொடர்பு மையம் தெரிவித்து உள்ளது.

கார்டிசெப்ஸ் என்றால் என்ன?ஏன் இதற்கு இவ்வளவு விலை?

கார்டிசெப்ஸ் சினென்சிஸ் அல்லது ஓபியோகார்டிசெபஸ் சினென்சிஸ் என்பது கம்பளிப்பூச்சிகளைப் பாதிக்கும் ஒரு வகை பூஞ்சையாகும். இந்த இமாலயன் வயாகரா என்று அழைக்கப்படும் கார்டிசெபஸ் ஒரு விலங்கு மற்றும் ஒரு தாவரத்தின் கலவையாகும்.

இந்த கார்டிசெப்ஸ் பங்கஸ்-யை மூலிகை மருந்துகளின் உற்பத்தியில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.மேலும் இந்த பூஞ்சையில் அதிக பாலுணர்வூட்டும் திறன் உள்ளதால் இது இமாலயன் வயகரா அல்லது காதல் மலர் என பெயர் பெற்றது. மேலும் பாலுணர்வை அதிகரிக்கும் பண்பினாலேயே இதன் விலையும் அதிக அளவில் உள்ளது.

author avatar
Pavithra