சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸால் உலகமே பெரிய இன்னல்களுக்கு ஆளாகி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் இந்த வைரசால் அனைத்து துறைகளும் மிகுந்த நஷ்டத்தை அடைந்து வருகிறது. தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 2 கோடி எண்பதாயிரதிற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சத்தை கடந்துள்ளது.