எச்சரிக்கை:! இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் தீராத நோய் உண்டாகும்!!

Photo of author

By Pavithra

எச்சரிக்கை:! இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் தீராத நோய் உண்டாகும்!!

இவ்வுலகில் பணக்காரர் மோதல் ஏழைகள் வரை ஓடி ஓடி உழைப்பது அந்த ஒரு ஜான் வயிற்று பசிக்காக தான்.ஆனால் தற்போது நாம் எதற்காக சம்பாதிக்கிறோம் என்பதனையே மறந்து சாப்பிட கூட நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.இதன் காரணமாக நாம் பலவித நோய்களை தான் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அக்கால கட்டத்திலோ உழைப்பிற்கு ஏற்ற சத்தான உணவினை எடுத்துக் கொண்டனர். உணவையே மருந்தாக எடுத்துக் கொண்ட காலம் அக்காலம்.ஏன் அந்த காலத்தில் இந்த திசையில் சாப்பிட்டால் இந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று வகுத்து உண்ட பொற்காலம் அது.எந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் என்ன பலன் என்று முன்னோர்கள் கூறியதை இந்த பதிவில் காணலாம்.

1.கிழக்கு திசையில் நாம் உட்கார்ந்து சாப்பிடும் பொழுது ஆயில் அதிகரிப்பதோடு நல்ல ஞானம் கிட்டும் எனவே நாம் குழந்தைகளுக்கு சாதம் ஊட்டும் பொழுது கிழக்கு திசையை நோக்கி ஊட்டினால் மிகவும் நல்லது.

2. மேற்கு திசை நோக்கி உட்கார்ந்து சாப்பிட்டால் அன்னலட்சுமியின் அருள் முழுவதும் பரிபூரணமாக கிடைக்கும் மேலும் செல்வம் பெருகும் என்பது முன்னோர்களின் கூற்று.

3.வடக்குவடக்கு திசையை நோக்கி நாம் உட்கார்ந்து சாப்பிடும் பொழுது தீராத நோய்கள் ஏற்படும்.மற்றும் ஏற்கனவே ஏற்பட்ட நோயும் தீராது எனவே வடக்கு திசையை பார்த்து உணவு உண்ணுதல் உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும்.

4.தெற்கு திசை நோக்கி உட்கார்ந்து சாப்பிட்டால் அழியாத புகழ் கிடைக்கும்.

அதாவது இரண்டு பேர் அல்லது இரண்டு பேருக்கு மேற்பட்டோர் உட்கார்ந்து சாப்பிடும் பொழுது திசைகளை பார்க்க தேவையில்லை.ஒருவர் மட்டும் தனியாக அமர்ந்து சாப்பிடும் பொழுது திசை அறிந்து சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகிறது.