இந்த 3 மாவட்டங்களுக்கு கன மழை அலார்ட்!! மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!
கோடை விடுமுறை தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டதை அடுத்து இதனை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை தோறும் பள்ளிகள் செயல் பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி விரைவாக பாடத்திட்டங்களை முடிக்கும் மாறும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனால் பருவமழை காரணமாக தொடர்ந்து விடுமுறை அளிக்கும் சூழல்தான் உண்டாகி உள்ளது.
அந்த வகையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை காஞ்சிபுரம் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் கனத்த மழை பெய்ததால் குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்தனர்.
தற்பொழுது வரை ஆங்காங்கே குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனத்த மழை பெய்து தான் வருகிறது. அந்த வகையில் இன்று குமரி, நெல்லை, தென்காசி இந்த மூன்று மாவட்டங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரை கணத்தமலை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம்.
இந்த நேரம் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதால் கட்டாயம் கொடை மற்றும் ரெயின் கோட் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் விடுமுறை குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.