கனமழை எதிரொலி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Photo of author

By Parthipan K

கனமழை எதிரொலி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Parthipan K

Updated on:

Heavy rain reverberates only for school holidays! The order issued by the District Collector!

கனமழை எதிரொலி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் கடந்த  வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.அதனை தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி  நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது.மாண்டஸ் என்று பெயர் பெற்ற இந்த புயல் புதுச்சேரி- ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா இடையே நள்ளிரவு கரையை கடந்தது.

மேலும் வட உள் தமிழகத்தில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து அடுத்த மூன்று மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளனர்.சென்னை ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலை முதலே மழை பெய்து வருகின்றது.இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர், ஊத்துக்கோட்டை,விழுப்புரம்  ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.