இனிமேல் அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்!! உயர் நீதிமன்றம் அதிரடி!!

0
131
Henceforth political parties can also protest against this!! High Court action!!
Henceforth political parties can also protest against this!! High Court action!!

இனிமேல் அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்!! உயர் நீதிமன்றம் அதிரடி!!

நீட் தேர்வுக்கு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கலாம் ,அவர்களுக்கும் அந்த உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளுக்காக நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நடைபெற்று அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான இட ஒதுக்கீடு முறை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

நீட் தேர்வு கொண்டு வந்த ஆரம்ப காலம் முதலே அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கின. ஆயினும் மத்திய அரசு இது குறித்து எந்தவித பதிலும் அளிக்கப்படாத நிலையில் தேர்வுக்கு உண்டான எதிர்ப்புகள் வலுத்துக் கொண்டே செல்கின்றது.

அதிலும் திமுக அரசு நீட் தேர்வை ஒழிப்பது லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் மற்றும் வழக்கறிஞருமான எம்.எல்.ரவி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்துக்களை பெறும் இயக்கத்தை தமிழக இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துவங்கியுள்ளார். மேலும் இந்த இயக்கத்தில் இணைந்து நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து போடும்படி பள்ளி மாணவர்கள் நிர்ப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே மத்திய அரசு இயற்றிய நீட் தேர்வு தொடர்பான சட்டத்தை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ள நிலையில் அந்த சட்டத்திற்கு எதிராக ஒரு மாநில அமைச்சர் போராட்டம் அறிவிக்க இயலாது. மேலும் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் பற்றி அரசு எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியிடாத நிலையில் இதனை அரசின் கொள்கையாக ஏற்றுக் கொள்ள முடியாது.

 அது மட்டும் இல்லாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற போது இந்திய அரசியலமைப்பின் மீது உண்மையும், மாறா பற்றும் கொண்டிருப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு அதே சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவது ஏற்புடையது இல்லை.

தமிழகத்தின் பள்ளிகளில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வரும் சூழ்நிலையில் நீட் தேர்வு எதிராக பள்ளி மாணவர்கள் அனைவரும் கையெழுத்து போடும்படி நிர்பந்தம் செய்யப்படுகின்றனர். மேலும் இந்த இயக்கத்துக்கு எந்தவித அனுமதியையும் அமைச்சர் பெறாமல் அவரே நேரடியாக துவங்கி உள்ளதால் ஆசிரியர்களும், அதிகாரிகளும் எந்தவித எதிர்ப்பையும் இந்த இயக்கத்திற்கு எதிராக தெரிவிக்கவில்லை.

எந்த அரசியல் நடவடிக்கைகளையும் பள்ளி வளாகத்துக்குள் அனுமதிப்பது என்பது கூடாது.

இந்த நடவடிக்கை மூலம் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டாம் என எதிர்மறையான எண்ணம் மாணவர்கள் மனதில் ஏற்படுவதால் படிப்பிலிருந்து மாணவர்களின் கவனம் திசை திரும்புவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே பள்ளிகளில் கையெழுத்து இயக்கமானது நடத்த அனுமதி கூடாது என பள்ளி கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவின் மீதான விசாரணை வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை தீர விசாரித்த நீதிபதிகள் இந்த கையெழுத்து இயக்கம் மூலம் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார்?? நீட் தேர்வு தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு முடிவினால் மாணவர் நலனுக்கு விரோதம் ஏற்பட்டால் வழக்கு தொடரலாம்.

மேலும் மாணவர் நலனுக்கு எதிராக மத்திய அரசு முடிவு எடுத்தால் அதை எதிர்த்து வழக்கும் தொடரவும், எதிர்ப்பு தெரிவிக்கவும் அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு என  நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில் இது போன்ற பொதுநல வழக்குகளை தாக்கல் செய்வதற்கு ஒரு வரம்பு உண்டு. எனவே இந்த வழக்கில் உண்மை தன்மையை விசாரிப்பதற்கு ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிபதிகள் கூறிய போது வழக்கை வாபஸ் செய்வதாக மனுதாரர் தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை வாபஸ் பெறுவதற்கு அனுமதி அளித்ததால் முடிவுக்கு வந்தது.

 

Previous articleகில், கோஹ்லி, ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டம்! இலங்கைக்கு 358 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா !!
Next article1 நாளில் சிறுநீர் கடுப்பு குணமாக இதை ஒரு சிட்டிகை பயன்படுத்துங்கள்!! இனி மருந்து மாத்திரை தேவையில்லை!!