இனிமேல் இந்த ஊர்களுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!
திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பயணங்களின் போது ஏற்படும் கூட்ட நெரிசலினை தவிர்க்கும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். அதன்படி தற்போது பக்ரீத் பண்டிகைக்காக சிறப்பு ரயில்களை இயக்கியது. அதேபோல சில முக்கியமான ஊர்களுக்கு சிறப்பு ரயில்களை குறிப்பிட்ட மாதங்களில் இயக்கி வருகிறது. ஏற்கனவே எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி முன்பதிவு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இனிமேல் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ஜூலை, ஆகஸ்ட், செப்டம்ப,ர் ஆகிய மாதங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில்[ 06030] அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்கா, ராஜபாளையம், விருதுநகர், திண்டுக்கல், பழனி, பொள்ளாச்,சி மற்றும் கோவை வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக மறுமார்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், ஆகிய மாதங்களில் திங்கட்கிழமை இரவு 7.45 மணிக்கு [06029] புறப்பட்டு திருநெல்வேலி ஜங்ஷனை வந்தடைகிறது. இதற்க்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.