மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய  படம்!!  தென்மாவட்ட கதை களத்தில் படமா?? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!

0
199
Poster of the new movie directed by Mari Selvaraj starring Duru Vikram!! Fans expect that the film will be in the story field of South District!!
Poster of the new movie directed by Mari Selvaraj starring Duru Vikram!! Fans expect that the film will be in the story field of South District!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ்  விக்ரம் நடிக்கும் புதிய  படம்!!  தென்மாவட்ட கதை களத்தில் படமா?? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!

இந்திய சினிமாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயோபிக்  படங்களையே எடுப்பதற்கு இயக்குனர்கள் அதிக அளவில் முனைப்பு காட்டி வந்தனர். சினிமா பிரபலங்கள் ,ஆராயிச்சியாளர்கள்  மற்றும் விளையாட்டு வீரர்கள் போனறவர்களின் வாழ்க்கை வரலாறுகளே படமாக எடுக்கப்பட்டது.

தமிழக விளையாட்டு வீரர் நட்ராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கப்படுவதாக தகவல் வெளியானது. இயக்குனர் மாரி செல்வராஜ்  அவர்  மாமன்னன் படத்திற்கு பிறகு ஒரு பயோபிக் படத்தை தயாரிக்க இருக்கிறார்.

இயக்குனர் மாரி  செல்வராஜ் இயக்க பா.ரஞ்சித் தயாரிக்க   விக்ரமின் மகன் துரு விக்ரம் இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அதிகாரப்பூர்வமாக வெளியானது.

இப்பொழுது இந்த படத்தின் போஸ்டர் ஒன்று சமுக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் துருவ்  விக்ரம் கபடி உடையுடன் முரட்டு தனமான தோற்றத்துடன் இருக்கிறார்.

இந்த படத்தில் அவர் ஒரு விளையாட்டு வீரர் என்று அறிவித்திருந்த நிலையில் இந்த போஸ்டர் மூலம் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த போஸ்டரின் மூலம் இது ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு எடுக்கப்படுகின்றது என்பது தெளிவாக தெரிகின்றது.

இது ஒரு தென்மாவட்ட பகுதியை சேர்ந்த கதைக்களமாக இருக்கும் இரு ஓரளவு உறுதியாகி இருக்கிறது.இதற்காக நடிகர் துருவ் விக்ரம் அவர்கள் இரண்டு வருடங்களாக தயாராகி கொண்டு இருந்தார்  என்றும் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான  படபிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.இந்த போஸ்டரின் மூலம் துரு விக்ரம் கடுமையாக உழைத்துள்ளார் என்பது தெரிகின்றது.

Previous articleபெற்ற மகளை பணத்திற்கு விற்ற கொடூர பெற்றோர்!! போலிஸ் விசாரணையில் வந்த திடுக்கிடும் தகவல்!! 
Next articleஇனிமேல் இந்த ஊர்களுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!