இளநரையை ஒரே வாரத்தில் கருமையாக மாற்ற உதவும் மூலிகை எண்ணெய்!!

Photo of author

By Divya

இளநரையை ஒரே வாரத்தில் கருமையாக மாற்ற உதவும் மூலிகை எண்ணெய்!!

Divya

இளநரையை ஒரே வாரத்தில் கருமையாக மாற்ற உதவும் மூலிகை எண்ணெய்!!

இன்றைய சூழலில் இளநரை வருவது என்பது எளிதான பாதிப்புகளில் ஒன்றாகி விட்டது.
இதற்கு வாழ்க்கை முறையும், உணவு முறை மாற்றமுமே முக்கிய காரணம் ஆகும்.

இளநரை உருவாகக் காரணங்கள்:-

ஊட்டச்சத்து இல்ல உணவு, இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தல், தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருத்தல், முறையற்ற தூக்கம், மன அழுத்தம்.

நரை முடியை கருப்பாக மாற்ற எளிய வழி:-

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய்

*கருஞ்சீரகம்

*கறிவேப்பிலை

*கரிசலாங்கண்ணி பொடி

மூலிகை எண்ணெய் தயாரிக்கும் முறை…

அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் 1 கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் 2 தேக்கரண்டி அளவு கருஞ்சீரகத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து சூடாகி கொண்டிருக்கும் எண்ணெயில் சேர்க்கவும்.

அடுத்து மிக்ஸி ஜாரில் 1 கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து மைய்ய அரைத்து சூடாகி கொண்டிருக்கும் எண்ணெய் கலவையில் சேர்த்து கிளறவும்.

தேங்காய் எண்ணெயின் நிறம் மாறி வந்ததும் எடுத்து வைத்துள்ள 1 தேக்கரண்டி கரிசலாங்கண்ணி பொடியை அதில் சேர்த்து காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் வடிகட்டி சேமித்து வைக்கவும். இந்த மூலிகை எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து வந்தோம் என்றால் இளநரை அனைத்தும் அடர் கருமையாக மாறிவிடும்.