ஒரே மாதத்தில் தலை முடியை மளமளவென வளர வைக்கும் “மூலிகை எண்ணெய்” – தயார் செய்வது எப்படி?
இன்றைய காலத்தில் முடி உதிர்வு பிரச்சனையை பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் சந்தித்து வருகிறார்கள்.
தலைமுடி உதிரக் காரணங்கள்:-
*முறையற்ற தூக்கம்
*மன அழுத்தம்
*இரசாயனம் கலந்த ஷாம்புவை தலைக்கு உபயோகிப்பது
இதனால் இளம் வயதில் முடி உதிர்வு ஏற்பட்டு விரைவில் வயதான தோற்றத்தை பலருக்கும் அடையும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது மிகவும் அவசியம் ஆகும். இதற்கு மூலிகை எண்ணெய் சிறந்த தீர்வாக இருக்கும். இந்த மூலிகை எண்ணெயை தினமும் தலைக்கு தேய்ப்பதன் மூலம் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
தேவையான பொருட்கள்:-
*வேப்பிலை – 1 கப்
*வெந்தயம் – 2 தேக்கரண்டி
*கருவேப்பிலை – 1 கப்
*மருதாணி இலை – 1/2 கப்
*செம்பருத்தி இலை – 1 கப்
*செம்பருத்தி பூ – 8
*சின்ன வெங்காயம் – 10
*பெரு நெல்லி – 2 (பொடியாக நறுக்கியது)
*கரிசலாங்கண்ணி பொடி – 1 1/2 தேக்கரண்டி
*தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்
செய்முறை:-
அடுப்பில் இரும்பு கடாய் வைத்து அதில் 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
அவை சூடேறியதும் கருவேப்பிலை, வேப்பிலை, மருதாணி இலை, செம்பருத்தி இலை சேர்த்து பொரிய விடவும்.
அதன் பின் செம்பருத்தி பூ, நசுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம்,சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள பெரு நெல்லி சேர்க்கவும்.
தொடர்ச்சியாக வெந்தய விதை 2 தேக்கரண்டி மற்றும் கரிசலாங்கண்ணி 2 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இதை 2 நாட்கள் வரை வைத்திருந்து பிறகு அதில் உள்ள கசடுகளை நீக்கி விட்டு ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து கொள்ளவும். இதை தினமும் தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி அடர் கருப்பாகவும், நீளமாகவும் வளரும்.