கூந்தல் அடர்த்திக்கு ஹெர்பல் ஷாம்பு – தயார் செய்வது எப்படி?

0
313
#image_title

கூந்தல் அடர்த்திக்கு ஹெர்பல் ஷாம்பு – தயார் செய்வது எப்படி?

பெண்களுக்கு அழகு சேர்க்கும் கூந்தலின் அளவை அடர்தியாக்க மூலிகை ஷாம்பு பொடி தயார் செய்யும் செய்முறை விளக்கம் தரப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்…

*சீயக்காய் – 1/4 கிலோ
*அரப்பு பொடி – 50 கிராம்
*பூந்தி கொட்டை – 50 கிராம்
*உலர்ந்த செம்பருத்தி பூ – 50 கிராம்
*நெல்லிக்காய் வற்றல் – 50 கிராம்
*பச்சை பயறு – 50 கிராம்
*வெந்தயம் – 25 கிராம்

செய்முறை

பூந்தி கோட்டையில் உள்ள விதையை நீக்கி அதன் தோலை எடுத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் சீகைக்காய், அரப்பு பொடி, பூந்தி கொட்டை தோல், உலர்ந்த செம்பருத்தி மற்றும் பெரு நெல்லிக்காய், பச்சை பயறு மற்றும் வெந்தயம் சேர்த்து அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

இதை ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை…

ஒரு கிண்ணத்தில் தங்கள் கூந்தலுக்கு தேவையான அளவு மூலிகை ஷாம்பு பொடி சேர்த்து வடித்த கஞ்சி(ஆறவைத்து) சேர்த்து பேஸ்டாக்கி கொள்ளவும். இதை தலை முழுவதும் தடவி 30 நிமிடங்களுக்கு ஊற விட்டு தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் தலை முடி அடர்த்தியாகவும், மிருதுவாகவும் வளரும்.

Previous articleமூலம் வேரோடு நீங்க.. இதை செய்யுங்கள்! 100% பலன் கிடைக்கும்!
Next articleஉடல் எடை கூட.. உயரம் அதிகரிக்க தினமும் இதை 1 கிளாஸ் குடித்து வாருங்கள்!