கொரோனோ அச்சுருத்தலை பயன் படுத்தி பணம் சம்பாதிக்க முயற்சி – இணைய தளத்தை முடக்க உயர்நீதி மன்றம் உத்தரவு

Photo of author

By Parthipan K

கொரோனோ அச்சுருத்தலை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முயற்சி – இணைய தளத்தை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவிட்19 வைரஸ் உலகம் முழு
வதும் வேகமாக பரவி வரும் நிலையில் இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் கடும் சாவாலை சந்தித்து வருகின்றனர். கொத்து கொத்தாக மக்கள் உயிரிழப்பு உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா மட்டுமே இதற்கான மருந்தை பரிசோதித்து வருகிறது. அந்த மருந்தை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுத்து தீவிரமாக கணிகாணித்து வருகிறது. எனினும் இதனால் முழுமையாக குணப்படுத்திவிட முடியும் என யாரும் உறுதியாக கூறவில்லை.

நிலைமை இவ்வாறு இருக்க இந்த நெருக்கடியான சூழலை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஒரு குறிப்பிட்ட இணையதளம் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அமெரிக்காவை சார்ந்த coronovirusmedicalkid.com என்ற இணையதளம் தாஙகள் கொரோனோ வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும் 4.95 அமெரிக்க டாலர் செலுத்தினால் மருந்தை விநியோகிப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

இது உலக அளவில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி உள்ளது.இது குறித்து விசாரித்த அமெரிக்காவின் டெக்ஸாஸ் நீதிபதி உடனடியாக இணையதளத்தை முடக்க உத்தரவிட்டார்.