மருத்துவ கல்லூரிகளுக்கு உயர்நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கை! இவ்வாறு இனி செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும்! 

மருத்துவ கல்லூரிகளுக்கு உயர்நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கை! இவ்வாறு இனி செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும்!

கடந்த இரண்டு ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்ப்பட்டது.அதனால் பள்ளி,கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது.அவ்வாறு நடத்தப்பட்டதால் போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை.

இந்நிலையில் நடப்பாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.அதனால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளது.அதனால் நடப்பாண்டில் நீட் தேர்வு நடத்தப்பட்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் வரும் 15ஆம் தேதி முதல் மருத்துவ படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் தனியார் சுயநிதி கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேரும் மாணவர்களிடம் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.அந்த புகாரின் அடிப்படையில் தமிழக அரசு நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிகம் வாங்கினால் கல்லூரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் அவர்கள் தனியார் சுயநிதி கல்லூரிகளின் முதல்வர் மற்றும் டீங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார் அந்த கடிதத்தில் சுயநிதி  கல்லூரிகள் 2022-23 கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சுற்றுகளுக்கான கலந்தாய்விற்கு மறுப்பு தெரிவித்தாலோ கட்டண நிர்ணயகுழு நிர்ணயம் செய்த கட்டணத்தைவிடவும் கூடுதலாக வசூல்  செய்தலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதனையடுத்து தேசிய மருத்துவ  ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் ,உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளை சுயநிதி கல்லூரிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Leave a Comment