தன்னுடைய குடும்பம்தான் முக்கியம் ஐபிஎல் இல்லை

Photo of author

By Parthipan K

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.
இதுகுறித்து கேன் ரிச்சர்ட்சன் பேசும்போது ‘‘ஐபிஎல் லீக் போன்ற சிறந்த தொடரில் இருந்து விலகுவது கடினமான ஒன்று. உலகின் தலைசிறந்த லீக்குகளில் ஒன்று ஐபிஎல். முதல் குழந்தை பிறக்க இருப்பதால் வீட்டில் சவால்கள் நிறைந்துள்ளன. குழந்தை பிறக்கும் நேரத்தில் வீட்டில் இல்லாமல் இருக்கும் ரிஸ்க்கை எடுக்க விரும்பவில்லை. ஐபிஎல் போட்டியை தவற விடுவது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால், இன்னொரு முறை ஐபிஎல் போட்டிக்கான வாய்ப்பு வரலாம். ஆனால் குழந்தை பிறக்கும்போது மனைவி அருகில் இருக்கும் வாய்ப்பு எப்போதும் கிடைக்கும் என்றும் நான் நினைக்கவில்லை’’ என்றார்.