இவர்களுக்கு 10 கிராம் தங்கம் 25000 ரொக்கம் அடித்தது ஜாக்பாட்!! மிஸ் பண்ணிடாதீங்க உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

Photo of author

By CineDesk

இவர்களுக்கு 10 கிராம் தங்கம் 25000 ரொக்கம் அடித்தது ஜாக்பாட்!! மிஸ் பண்ணிடாதீங்க உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

CineDesk

இவர்களுக்கு 10 கிராம் தங்கம் 25000 ரொக்கம் அடித்தது ஜாக்பாட்!! மிஸ் பண்ணிடாதீங்க உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

ஒவ்வொரு வருடமும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வு குழு மூலம் தேர்ந்தெடுப்பார்கள்.

இவ்வாறு தேர்வு செய்தவர்களுக்கு தமிழக முதல்வர் அவர்களால் விருதுகளை வழங்கியும் அவர்களை ஊக்குவித்தும், கௌரவப்படுத்தியும் வருகின்றனர்.

இவ்வாறு செய்வதால் தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தொண்டு நிறுவனங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்களையும் ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது வழங்குதல் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு செய்வதால் அவர்களுக்கு மேலும் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்த தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த மருத்துவர், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சமூகப்பணியாளர், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய விருதுகளை தேர்வு செய்து இவர்களுக்கு தங்கப் பதக்கங்களும், பணத் தொகையும் வழங்க உள்ளனர்.

இந்த விருதுகளுக்கான விண்ணப்ப படிவங்களை
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம்,
எண் 5, லேடி வேலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை -5.

இந்த முகவரிக்கு அனுப்பலாம் அல்லது சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடம் இருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று அதை நம் முகவரிகளுடன் பூர்த்தி செய்து அதனுடன் அனைத்து சான்றிதழ்களையும் சேர்த்து ஜூன் 26 பிற்பகல் 5.45 மணிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடம் நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.