இருமல் இருக்கும் பொழுது ஏற்படும் தொண்டை கரகரப்பு! இதை சரிசெய்ய உதவும் சிறந்த மருந்து இதோ!!
நமக்கு இருமல் பிரச்சனை இருக்கும் பொழுது ஏற்படும் தொண்டை கரகரப்பு பிரச்சனையை சரி செய்வதற்கு இந்த பதிவில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இருமல் என்பது சாதாரணமான நோய் ஆகும். இதில் வறட்டு இருமல் நமக்கு தொண்டையில் பெண்களை ஏற்படுத்தும். மேலும் தொண்டையில் வலியை ஏற்படுத்தும். தொண்டை கரகரப்புக்கு வழிவகுக்கும்.
தொண்டை கரகரப்பாக இருக்கும் பொழுது பெரும்பாலானோர் அப்படியே விட்டு விடுவார்கள். ஒரு சிலர் தொண்டையில் தைலம் தேய்ப்பார்கள். இவையெல்லாம் பிரச்சனையை மேலும் அதிகரிக்கக் கூடும். எனவே இந்த தொண்டை கரகரப்பை குணப்படுத்தும் இயற்கையான மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…
* பால் மிளகு
* திப்பிலி
* ஏலரிசி
* சுக்கு
* தேன்
இந்த மருந்தை தயார் செய்யும் முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு சிறிய கடாய் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இந்த கடாயில் பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி, சுக்கு இவை அனைத்தையும் ஒன்றாக போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பை ஆப் செய்துவிட்டு இதில் வறுத்து வைத்துள்ள பொருட்களை ஆற வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நமக்கு ஏற்படும் தொண்டை கரகரப்பு ஏற்படும்.