அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Photo of author

By Rupa

அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

கொரோனா தொற்றானது தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தற்பொழுது இரண்டாம் அலை முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் கொரோனா தொற்றானது ஓமைக்ரானா உருமாற்றம் அடைந்து வேகமாக பரவி வருகிறது. அதனால் ஒவ்வொரு மாநிலமும் தொற்றின் நிலவரப்படி அவர்களுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அமல் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்கம் ,ராஜஸ்தான் ,ஒடிசா ,ஜார்கண்ட், கோவா போன்ற மாநில அரசுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.

மாணவர்களுக்கு பழைய முறையைப் போன்றே ஆன்லைன் மூலம் பாடங்களை கற்பிக்க பரிந்துரை செய்துள்ளனர். தற்பொழுது தமிழக அரசும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகலுக்கு விடுமுறை அளித்துள்ளது. அத்துடன் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்துள்ளது. மேலும் சிற்றார் காண தடுப்பூசி ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மூலமாகவே தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். பள்ளிகள் மூடப்பட்டு மாநிலங்களில் ,அவரது பெற்றோர்களின் எண்ணிற்கும் தடுப்பூசி போடப்படும் மையம் குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

அதனைப் பின்பற்றி அவரது பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டு வரலாம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தெலுங்கானாவில் தொற்று அதிக அளவு பரவி வருவதால் பொதுக் கூட்டங்களுக்கு தடை விதித்திருந்தனர். அந்த கட்டுப்பாட்டை தொடர்ந்து தற்பொழுது ஜனவரி 8 முதல் 16 வரை பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உள்ளனர். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வெளியிட்டுள்ளார். அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் வரும் ஜனவரி 8ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுப்பு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.