11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதியவர்! இதுவரை மாட்டாமல் இருந்தது எப்படி?

0
74

11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதியவர்! இதுவரை மாட்டாமல் இருந்தது எப்படி?

சுமார் கடந்த இரண்டு வருடங்களாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக உலக நாடுகள் அனைத்தும், ‘அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தின.

இந்தியாவிலும் கொரோனா தொற்றிலிருந்து மக்கள் அனைவரும் தங்களை தற்காத்துக் கொள்ளும் வண்ணம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் தடுப்பூசியை இரண்டு தவணையாக செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் மக்கள் யாரும் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கத்தை உணர்ந்த மக்கள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் 84 வயது முதியவர் ஒருவர் 11 முறை தடுப்பூசி செலுத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் பிரம்மதேவ் மண்டல். 84 வயதான இவர் இதுவரை, 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். தற்போது 12வது முறையாக தடுப்பூசி செலுத்தி கொள்ள முயன்ற போது வசமாக பிடிபட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த மாநில சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில்

84 வயது முதியவரான பிரம்மதேவ் மண்டல், தபால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதியில் இருந்து டிசம்பர் 30-ம் தேதி வரை 11 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். தற்போது 12-வது முறையாகவும் இவர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வந்துள்ளார். தடுப்பூசி செலுத்தி கொள்ள முயன்ற போது அந்த முதியவர் வசமாக சிக்கியுள்ளார்.

8 முறை ஆதார் எண்ணையும், 3 முறை வாக்காளர் அடையாள எண்ணையும் கொடுத்து தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். இதுகுறித்து அவரிடம் விசாரித்ததில் தடுப்பூசியால் அதிகம் பயன் அடைந்ததாகவும் ஆகவேதான் நான் மீண்டும் மீண்டும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும் அந்த முதியவர் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K