செலவின்றி டாய்லெட்டை சுத்தம் செய்யும் முறை! இனி கை வலிக்க கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை!

0
279
#image_title

செலவின்றி டாய்லெட்டை சுத்தம் செய்யும் முறை! இனி கை வலிக்க கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை!

அடிக்கடி டாய்லெட் பயன்படுத்தும் நாம் அதை முறையாக சுத்தம் செய்வதில்லை. இதனால் கறை படிந்து டாய்லெட்டில் துர்நாற்றம் வீசும்.

இந்த அழுக்கு கறைகளில் அதிக கிருமிகள் இருப்பதினால் அவை நம் உடலில் புகுந்து நோய்களை பரப்பும். எனவே இந்த அழுக்கு கிருமிகள் நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சுலபமான வழிமுறைகளை பின்பற்றவும்.

தேவைப்படும் பொருட்கள்…

*வினிகர்
*கம்பி நார்

டாய்லெட் சுற்றி வினிகர் ஊற்றி ஐந்து நிமிடத்திற்கு ஊற விடவும். பின்னர் ஒரு கம்பி நார் கொண்டு தேய்க்கவும். இவ்வாறு செய்தால் நீண்ட நாட்கள் படிந்து கிடந்த அழுக்கு அனைத்தும் வெளியேறி விடும்.

வினிகர் அழுகை நீக்க கூடிய ஒரு பொருள். பினாயில் உள்ளிட்ட கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தி சுத்தம் செய்வதை விட வினிகரை பயன்படுத்துவது நல்லது.

தேவைப்படும் பொருட்கள்…

*பாத்திரம் துலக்கும் சோப்

ஒரு டப்பாவில் பாத்திரம் கழுவ உபயோகிக்கும் சோப்பை சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்து டாய்லெட்டை சுற்றி ஊற்றிக் கொள்ளவும். 10 நிமிடங்களுக்கு பின்னர் ஒரு நார் கொண்டு சுத்தம் செய்யவும்.

*சீகைக்காய் தூள்
*ஷாம்பு
*எலுமிச்சை சாறு

சீகைக்காய் தூள், ஷாம்பு, மற்றும் எலுமிச்சை சாறு கலந்து டாய்லெட்டில் ஊற்றி ஒரு பிரஸ் வைத்து தேய்த்தால் கறைகள், அழுக்கு அனைத்து நீங்கிவிடும்.

Previous articleகேரளா ஸ்பெஷல் சுலைமானி டீ செய்வது எப்படி?
Next articleஉடல் சூடு குறைய நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய 10 வழிமுறைகள்!