கிழிந்து தொங்கும் காது ஓட்டையை சரி செய்வது எப்படி? எளிய வழி இதோ!!

0
367
#image_title

கிழிந்து தொங்கும் காது ஓட்டையை சரி செய்வது எப்படி? எளிய வழி இதோ!!

பெண்களுக்கு தோடு அணிவது என்பது பிடித்தமான ஒன்றாக இருக்கிறது.அதிலும் அதிக எடை கொண்ட தோட்டை அணியும் பெண்களுக்கு அது அழகாக இருந்தாலும் அதில் ஆபத்தும் இருக்கிறது.அது என்னெவென்றால் அடிக்கடி எடை அதிகம் கொண்ட தோட்டை அணிவதால் சிறிதாக இருந்த காது ஓட்டைகள் இழுத்து கொண்டு வந்து விடும்.இதனால் காது பாட்டிகளின் காது போல் காட்சியளிக்கும்.இதனை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளை ட்ரை பண்ணி பாருங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*மைதா மாவு – 1 தேக்கரண்டி

*பேக்கிங் சோடா – 1/2 தேக்கரண்டி

*கல் உப்பு – 2 சிட்டிகை

செய்முறை:-

1) ஒரு பவுலில் மைதா மாவு 1 தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும்.

2) பிறகு அதில் சமையலுக்கு பயன்படுத்தும் பேக்கிங் சோடா(ஆப்ப சோடா) 1/2 தேக்கரண்டி சேர்க்கவும்.பேக்கிங் சோடா பயன்படுத்த விரும்பாதவர்கள் கார்ன் பிளார் மாவு 1/2 தேக்கரண்டி எடுத்து கொள்ளலாம்.

3) அதில் 2 தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.

4) பிறகு ஒரு பவுல் எடுத்து அதில் 2 தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி 2 சிட்டிகை அளவு கல் உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.

5) காதில் தோடு அணிந்திருந்தால் அதை கழட்டி விடுங்கள்.பிறகு இந்த கல் உப்பு தண்ணீரை தொங்கிய காது ஓட்டைகளில் தடவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

6) பிறகு செய்து வைத்துள்ள மைதா மாவு + பேக்கிங் சோடா கலவையை வைத்து அந்த காது ஓட்டைகளின் அடைக்க வேண்டும்.தினமும் 2 மணி நேரம் இப்படி செய்தோம் என்றால் கிழிந்து தொங்கும் காது ஓட்டைகள் விரைவில் சிறியதாகி விடும்.

மேலும் இந்த ரெமிடியை ஒரு முறை செய்து 10 நாட்களை வரை பயன்படுத்தலாம். தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் நீண்ட நாட்களாக பெரிதாக இருந்த காது ஓட்டை விரைவில் சிறு ஓட்டையாக மாறி விடும்.

Previous articleவீட்டில் மொய்க்கும் ஈக்களை காலி செய்ய அருமையான 5 வழிகள்!! 100% இயற்கை முறை!
Next articleபல் ஈறு வலியால் கஷ்டப் படுகிறீர்களா? அப்போ இந்த டீ செய்து குடித்து பாருங்கள் நல்ல தீர்வு கிடைக்கும்!!