வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயுக்களை நிமிடத்தில் வெளியேற்றுவது எப்படி?
முறையாக உணவு செரிக்காமல் இருந்தாலோ, உரிய நேரத்தில் மலத்தை வெளியேற்றாமல் இருந்தாலோ வாயுத் பிரச்சனை ஏற்படும். இந்த பாதிப்பு ஏற்பட்ட ஒருவர் பொது வெளியில் நடமாடுவது என்பது மிகவும் கடிமான ஒன்றாகும். இந்த பாதிப்பை விரைவில் சரி செய்து விடுவது நல்லது.
வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்:-
*செரிமானக் கோளாறு
*உடலில் உள்ள அமிலங்கள் அதிக அளவு சுரத்தல்
*மன அழுத்தம்
*முறையற்ற உணவு முறை பழக்கம்
*காரம் நிறைந்த உணவு உண்ணுதல்
*முறையாக மலம் கழிக்காமல் இருப்பது
வாயுத் தொல்லை நீங்க வழி:-
*அதிகளவு தண்ணீர் பருகுதல்
*சமையலில் பெருங்காயத்தை பயன்படுத்துதல்
*சீரகம், சோம்பு உள்ளிட்டவைகளை மென்று சாப்பிடுவது
*எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து பருகுதல்
*எளிதில் செரிக்கக் கூடிய உணவை உண்ணுதல்
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து வாயுத் தொல்லையை நிமிடத்தில் சரி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-
*இஞ்சி – 1 துண்டு
*பெருங்காயத் தூள் – 1/2 தேக்கரண்டி
*இலவங்கம் – 4
*எலுமிச்சை சாறு – 1 1/2 தேக்கரண்டி
*சீரகம் – 1/4 தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் 1 எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு பவுலில் பாதி எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும்.
அடுத்து 4 இலவங்கம், 1/2 தேக்கரண்டி பெருங்காயத் தூள், சிறு துண்டு இடித்த இஞ்சி, 1/4 தேக்கரண்டி சீரகம் மற்றும் 1 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து 10 நிமிடம் வரை ஊற விட்டு பின்னர் பருகவும். இவ்வாறு செய்தால் உடலில் தேங்கி கிடந்த கேஸ் முழுவதும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.