கேரளா ஸ்டைலில் “பனானா ஜாம்” செய்வது எப்படி?

0
41
#image_title

கேரளா ஸ்டைலில் “பனானா ஜாம்” செய்வது எப்படி?

நம் அனைவருக்கும் பிடித்த கனிகளில் ஒன்று வாழை. இந்த வாழை அதிக ஊட்டசத்துக்களை கொண்டிருப்பதால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பழமாக திகழ்கிறது. இந்த வாழையில் சிப்ஸ், ஹல்வா, ஜூஸ் என்று பல்வேறு வித உணவுகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கனிந்த வாழையை கொண்டுகேரளா ஸ்டைலில் ஜாம் செய்வது குறித்த தெளிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறையில் செய்தால் வாழைப்பழ ஜாம் அதிக மணம் மற்றும் சுவையுடன் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

*கனிந்த வாழை – 2

*தேங்காய் பால் – சிறிதளவு

*வெல்லம் – 1 கப்

*நெய் – 1/4 கப்

செய்முறை:

முதலில் நன்கு கனிந்த வாழை பழத்தை எடுத்து தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் 1 கப் வெல்லம் சேர்த்து நன்கு கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் அடிகனமான பாத்திரம் வைத்து அதில் 1/4 கப் நெய் ஊற்றவும். அவை சூடானதும் அரைத்து வைத்துள்ள நேந்திர வாழை விழுதை சேர்த்து மிதமான தீயில் நன்கு கிளறி விடவும்.

பிறகு கரைத்து வைத்துள்ள வெல்லக் கரைசலை ஊற்றி கலந்து விடவும். நேந்திர வாழைக் கலவை நன்கு வெந்து வந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பாலை ஊற்றி கலந்து விடவும். இவை நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

ஜாம் நன்கு ஆறியப் பிறகு ஒரு கண்ணாடி ஜாரில் சேர்த்து சேமித்து வைத்துக் கொள்ளவும். இந்த முறையில் வாழைப்பழ ஜாம் செய்து கொடுத்தால் குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பார்கள்.