கடையில் கிடைக்கும் அதே டேஸ்டில் ஹார்லிக்ஸ் பவுடர் செய்வது எப்படி? அட இதனை நாளா இது தெரியாம போச்சே!!

Photo of author

By Divya

கடையில் கிடைக்கும் அதே டேஸ்டில் ஹார்லிக்ஸ் பவுடர் செய்வது எப்படி? அட இதனை நாளா இது தெரியாம போச்சே!!

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் ஹார்லிக்ஸ் பிடித்த ஒன்றாக இருக்கிறது.இதன் டேஸ்ட் அனைவரையும் சுண்டி இழுக்கும் தன்மை கொண்டிருக்கிறது. குழந்தைகள்,கர்ப்பிணிகள்,பெரியவர்களுக்கு என்று வெவ்வேறு வகைகளில் ஹார்லிக்ஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதில் சுவை அதிகம் என்றாலும் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் சில பொருட்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

எனவே இதனை கடையில் வாங்குவதை நிறுத்தி விட்டு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அதே ஹார்லிக்ஸ் டேஸ்டில் தயாரித்து பாலில் கலந்து பருகினால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும் அதே சமயம் கடையில் வாங்குவதை தவிர்ப்பதால் பணமும் மிச்சமாகும்.

தேவையான பொருட்கள்:-

*முளைக்கட்டிய கோதுமை – 1 கப்

*பால் பவுடர் – 3 தேக்கரண்டி

*முந்திரி பருப்பு – 10

*பாதாம் பருப்பு – 10

*பிஸ்தா – 10

செய்முறை:-

1.முழு கோதுமை 1 கப் அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 7 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

2.பிறகு கோதுமையை தண்ணீரில் இருந்து வடிகட்டி ஒரு காட்டன் துணியில் மூட்டை போல் கட்டி இரண்டு நாட்கள் வைக்க வேண்டும்.அவ்வப்போது அந்த மூட்டை மீது தண்ணீர் தெளிக்கவும்.

3.பிறகு மூன்றாவது நாள் அந்த கோதுமையை ஒரு காட்டன் துணியில் நிழலில் வைத்து உலர விட வேண்டும்.

4.அடுத்ததாக அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பாதம் பருப்பு,முந்திரி மற்றும் பிஸ்தாவை தனித்தனியாக வாசனை வரும் வரை வறுத்து கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பை அணைத்து அதனை ஆறவிட வேண்டும்.

5.பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைக்கவும்.

6.பிறகு அதை தண்ணீர் இல்லாத சுத்தமான தட்டில் கொட்டி வைக்கவும்.

7.அதையடுத்து அடுப்பில் கடாய் வைத்து அதில் முளைகட்டிய கோதுமையை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பிறகு அடுப்பை அணைத்து அதை ஒரு தட்டிற்கு மாற்றி ஆற விடவும்.

8.அதன் பின்னர் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் போல் அரைத்து கொள்ளவும்.

9.அதை ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பாதம்,முந்திரி,பிஸ்தா பவுடர் மற்றும் பால் பவுடர் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்கவும்.பிறகு இதனை உலர்ந்த காற்று புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைக்கவும்.

ஹார்லிக்ஸ் பால் செய்முறை:-

*அடுப்பில் டீ பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் பால் ஊற்றி கொதிக்க விடவும்.

*ஒரு டம்ளரில் 1 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் அரைத்து வைத்துள்ள ஹார்லிக்ஸ் பவுடர் 1 1/2 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்துள்ள பாலை வடிகட்டி நன்கு கலக்கி பருகவும்.