உடல் குதிரை பலம் பெற.. குதிரைவாலி சூப் செய்யும் முறை!! இப்படி செய்தால் டேஸ்டாக இருக்கும்!!
நம் உணவு பயன்பாட்டில் குறைந்த இந்த கொள்ளு பருப்பில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.இந்த பருப்பை தொடர்ந்து உண்டு வருவதால் உடல் உறுப்புக்கள் வலுப்பெறும். வயிற்றுப்போக்கு, ஜலதோஷம்,கண் சம்மந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த இது உதவுகிறது.உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெற உதவுகிறது.இந்த கொள்ளு உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது.இந்த கொள்ளு பருப்பு குதிரைவாலி என்றும் அழைக்கப்படுகிறது.இதில் ரசம்,சட்னி,சூப்,வடை போன்ற பல்வேறு வகையான உணவுகளை செய்து உண்ண முடியும்.
கொள்ளு சூப் செய்யும் முறை:-
தேவையான பொருட்கள்:-
*கொள்ளு பருப்பு -1/2 கப்
*எண்ணெய் – 1 தேக்கரண்டி
*கடுகு -1/2 தேக்கரண்டி
*உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு
*கொத்தமல்லி தாழை – ஒரு கைப்பிடி
*கருப்பு மிளகு – 1 தேக்கரண்டி
*சீரகம் – 1 தேக்கரண்டி
*கறிவேப்பிலை – 2 கொத்து
*புளி – சிறு உருண்டை
செய்முறை:-
1.அடுப்பில் ஒரு கடாய் கொள்ளு பருப்பு போட்டு வறுத்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
2.குக்கர் எடுத்து அதில் ஊற வைத்த கொள்ளு பருப்பை சேர்த்து தண்ணீர் ஊற்றி 8 முதல் 10 விசில் வரை வேகும் வரை வேகவைக்க வேண்டும்.
3.பின்னர் அதனை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.
4.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
5.அரைத்து வைத்துள்ள கொள்ளு பருப்பு கலவையை கடாயில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
6.பின்னர் மிளகு மற்றும் சீரகத்தை அரைத்து அதில் சேர்க்கவும்.
7.பின்னர் புளி மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
8.கொள்ளு சூப்பில் இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி விடவும்.