கேரளா ஸ்டைல் பலாக்காய் ப்ரை செய்வது எப்படி?

0
142
#image_title

கேரளா ஸ்டைல் பலாக்காய் ப்ரை செய்வது எப்படி?

பலாக்காயை வைத்து சுவையாக ப்ரை செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பலாக்காய் ப்ரை கேரளாவில் பேமஸான உணவு வகைகளில் ஒன்றாகும்.

தேவையான பொருட்கள்:-

*பலாச்சுளை

*உப்பு

*மிளகாய்த்தூள்

*எண்ணெய்

செய்முறை…

பலாக்காய் சுளையில் தேவையான அளவு எடுத்து கொட்டைகளை நீக்கி தண்ணீர் கொண்டு நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு காட்டன் துணி கொண்டு ஈரமில்லாதவாறு சுத்தம் செய்து நீளவாக்கில் மெல்லிய குச்சி போல நறுக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பொரித்தெடுக்க தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள பலாச்சுளை துண்டுகளை சேர்த்து பொரித்து எடுத்தெடுக்கவும்.

பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றி சிறிதளவு உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இவ்வாறு செய்தால் பலாக்காய் ப்ரை அதிக சுவையுடன் இருக்கும்