தக்காளி சட்னி சுவையாக செய்வது எப்படி? ஆஹா.. என்ன ஒரு ருசி!!

0
116
#image_title

தக்காளி சட்னி சுவையாக செய்வது எப்படி? ஆஹா.. என்ன ஒரு ருசி!!

நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் தக்காளி சேர்க்கப்படுகிறது.இந்த தக்காளி புளிப்பு மற்றும் சிறிது இனிப்பு சுவை கொண்டிருப்பதால் உணவில் தனி ருசி கொண்டிருக்கிறது.இந்த தக்காளியில் சட்னி,சாதம்,பிரியாணி,குழம்பு,தொக்கு,ஊறுகாய் என்று பல வகைகளில் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.இந்த தக்காளி பழத்தை வைத்து ருசியான தக்காளி சட்னி செய்ய கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பாலோ செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:-

தக்காளி – 4

பெரிய வெங்காயம் – 1

பூண்டு – 7 பற்கள்

வர மிளகாய் – 4

உப்பு – தேவையான அளவு

கடுகு – 1/2 தேக்கரண்டி

எண்ணெய் – 4 தேக்கரண்டி

கருவேப்பிலை – 1 கொத்து

செய்முறை:-

1.தக்காளி மற்றும் வெங்காயத்தை இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

2.அடுப்பில் கடாய் வைத்து அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.அவை சூடேறியதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,தக்காளி மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவும்.

3.பிறகு வர மிளகாய் 4 சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

4.அவை ஆறிய பின் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும்.

5.அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் 3 தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும்.அவை சூடேறியதும் கடுகு 1/2 தேக்கரண்டி சேர்த்து அவை பொரிந்ததும் கருவேப்பிலை சேர்க்கவும்.

6.பிறகு அரைத்து வைத்துள்ள விழுதுகளை சேர்த்து நன்கு கிளறி விடவும்.கொதிக்கும் பொழுது நன்கு தெறிக்கும்.அதனால் ஒரு தட்டு கொண்டு மூடி அவ்வப்போது திறந்து கிளறி விடவும்.
பச்சை வாசனை நீங்கிய பின் அடுப்பை அணைத்து விடவும்.

Previous articleகையால் பிடிக்க முடியாத அளவுக்கு கூந்தல் வளர வேண்டுமா!!? அப்போ இந்த எண்ணெயை வாரம் ஒரு முறை பயன்படுத்துங்கள்!!!
Next articleவீட்டில் ஒரே ஈ கூட்டமா இருக்கா? அப்போ இதை உடனே பண்ணுங்க!! தவறினால் ஆபத்து நிச்சயம்!!