முகம் ஜொலிக்க அரிசிமாவை இவ்வாறு பயன்படுத்துங்கள்!

0
137
#image_title

முகம் ஜொலிக்க அரிசிமாவை இவ்வாறு பயன்படுத்துங்கள்!

நம்முடைய முகம் ஜொலிக்க வேண்டும் என்றால் அரிசிமாவை நாம் பயன்படுத்தலாம். அதாவது அரிசிமாவுடன் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தும் பொழுது நமது முகம் ஜொலிக்கத் தொடங்கும். பளபளப்பாக மாறும்.

நாம் அரிசி கழுவிய தண்ணீரை முகத்திற்கு பயன்படுத்தும் பொழுதே நமது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும். முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறும்.

அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்துவது போல நாம் முகத்திற்கு அரிசி மாவு பயன்படுத்தும் பொழுது முகம் ஜொலிக்கத் தொடங்கும். அதுவும் அரிசி மாவுடன் சேர்க்கப்படும் பொருட்களில் உள்ள சத்துக்கள் அரிசி மாவுடன் சேர்ந்து நமது சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கும்.

அரிசி மாவுடன் சந்தனத்தை கலந்து பயன்படுத்தும் பொழுது முகத்தில் உள்ள சரும பிரச்சனைகள் அனைத்தும் குணமடையும். இதில் வேறு என்னென்ன பொருட்களை சேர்ப்பது, எவ்வாறு பயன்படுத்தி முகத்தை பளபளப்பாக மாற்றி ஜொலிக்க வைப்பது என்பது பற்றி தற்பொழுது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்…

* அரிசி மாவு
* சந்தனம்
* ரோஸ் வாட்டர்

செய்முறை…

ஒரு சிறிய பவுல் ஒன்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து அத்துடன் அரை ஸ்பூன் சந்தனப் பவுடர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்கு கலந்து விட்டு பின்னர் இதில் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளவும். முகத்தை ஜொலிக்கவைக்கும் மருந்து தயாராகிவிட்டது.

பின்னர் இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும். பின்னர் இதை 10 முதல் 15 நிமிடம் வரை விட்டு பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதைவாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் முகம் ஜொலிக்கத் தொங்கும்.

Previous articleவருவாய் துறையில் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.2,25,000/- ஊதியம்!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!
Next articleKerala Style Recipe: கேரளா ஸ்டைல் ‘சிக்கன் ரோஸ்ட்’ – இந்த முறையில் செய்து பாருங்கள்!!