கணவன்மார்கள் உஷார் ஹெல்மெட் போடாமல் சென்று சிக்னலில் மாட்டிய கணவன் ! விவாகரத்து வரை கொண்டு சென்ற விவகாரம் ! 

Photo of author

By Amutha

 கணவன்மார்கள் உஷார் ஹெல்மெட் போடாமல் சென்று சிக்னலில் மாட்டிய கணவன் ! விவாகரத்து வரை கொண்டு சென்ற விவகாரம் ! 

Amutha

கணவன்மார்கள் உஷார் ஹெல்மெட் போடாமல் சென்று சிக்னலில் மாட்டிய கணவன் ! விவாகரத்து வரை கொண்டு சென்ற விவகாரம் ! 

பைக்கில் இளம்பெண்ணுடன் சென்ற நபர் சிக்னலில் ஹெல்மெட் போடாமல் சென்றதால் மனைவியிடம் வசமாக மாட்டி வாக்குவாதத்தில் ஆரம்பித்த பிரச்சனை விவகாரத்து வரை சென்றுள்ளது.

கேரளா மாநிலத்தில் நபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இளம்பெண் ஒருவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த இருசக்கர  வாகனம் அவரது மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் மனைவியை  விடுத்து  வேறு ஒரு பெண்ணுடன் அந்த பைக்கில் பயணம் செய்துள்ளார்.

அவர் ஹெல்மெட் போடாமல் பயணம் செய்ததால் போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி அது தொடர்பான புகைப்படங்கள் வாகனத்தின் உரிமமையாளரான  அந்த நபரின்  மனைவியின் அலைபேசிக்கு போக்குவரத்து துறையால் அனுப்பப்பட்டுள்ளது. புகைப்படத்தில் தனது கணவருடன் வேறு ஒரு இளம்பெண் அமர்ந்து இருப்பதைக் கண்ட அவரது மனைவி அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து கடும் கோபம் கொண்ட அந்த நபரின் மனைவி அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். ஆனால் அந்த நபரோ அந்த பெண்ணுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் வரும் வழியில் அவருக்கு லிப்ட் மட்டுமே கொடுத்ததாக கூறியுள்ளார். இதனை அவரது மனைவி நம்பாத நிலையில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில் தனது கணவர் தன்னையும் தனது 3 வயது குழந்தையையும் துன்புறுத்துவதாக அந்த பெண்மணி காவல் நிலையத்தில் புகார் செய்யவே அவரது கணவர் காவல் துறையினாரால்  கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு ஹெல்மெட் அணியாத பயணம் தற்போது விவகாரத்து வரை கொண்டு சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.