சாதனைகளுக்குரிய நபராக இருக்கும் உங்களை குறித்து நான் பெருமைப்படுகிறேன்

Photo of author

By Parthipan K

நேற்று இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தை இந்தியர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடினர். ஆனால் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. ஏனேனில் இந்திய கிரிக்கெட் அணியின் சகாப்தமாக விளங்கும் டோனி தன்னுடைய ஓய்வை அறிவித்தார். அனைத்து பிரபலங்களும் கருத்து தெரிவித்த நிலையில் தோனியின் மனைவியான சாக்‌ஷி உருக்கமான பதிவை வெளியிட்டார்.
மக்கள் ஒருபோதும் நீங்கள் ஏற்படுத்திய  உணர்வுகளை மறக்க மாட்டார்கள் நீங்கள் சாதித்ததைப் பற்றி நீங்கள் பெருமைப்பட வேண்டும். விளையாட்டுக்கு உங்களது மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியதற்கு வாழ்த்துக்கள். சாதனைகளுக்குரிய நபராக இருக்கும் உங்களை குறித்து நான் பெருமைப்படுகிறேன் என்று கூறினார்.