ED விசாரணைக்கு நான் தயார்.. திமுகவை போல் பயந்து அஞ்சுபவன் நான் இல்லை – மாஜி அமைச்சர் பேச்சு..!!

Photo of author

By Divya

ED விசாரணைக்கு நான் தயார்.. திமுகவை போல் பயந்து அஞ்சுபவன் நான் இல்லை – மாஜி அமைச்சர் பேச்சு..!!

Divya

ED விசாரணைக்கு நான் தயார்.. திமுகவை போல் பயந்து அஞ்சுபவன் நான் இல்லை – மாஜி அமைச்சர் பேச்சு..!!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் மணல் கொள்ளை மூலம் ரூ.60 ஆயிரம் கோடி வரை சம்பாதித்து இருக்கிறார் என்று திமுகவின் முக்கிய புள்ளி ஒருவர் பேசிய வீடியோ காட்டுத் தீ போல் பரவி வருகிறது. இந்த வீடியோவால் அமலாக்கத்துறையானது தற்பொழுது மணல் கொள்ளை விவகாரத்தை கையில் எடுத்து இருக்கிறது. விசாரணை தீவிரமானால் துரைமுருகன் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு வருகிறது.

இந்நிலையில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமான சி.வி.சண்முகம் அவர்கள் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் திமுகவை பற்றி கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார்.

கடந்த அதிமுக ஆட்சியில் அனைத்தும் சரியாக நடந்தது. ஆனால் தற்பொழுது ஆட்சி செய்து வரும் திமுக என்ற கொள்ளை கூட்டம் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையிடம் சிக்கி சின்ன பின்னமாகி வருகிறது.

தற்பொழுது அமலாக்கத்துறை மணல் கொள்ளை குறித்து முழுமையான விசாரணையில் இறங்கி இருக்கிறது. ED விசாரணை முழுமையாக முடிந்து பின்னர் தான் மணல் கொள்ளை குறித்து முழு விவரம் வெளியே வரும். அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் கொள்ளை குறித்து விசாரிக்க யாரையெல்லாம் அழைக்கிறீர்களோ அவர்கள் எல்லாம் ஒத்துழைப்பு குடுத்து தான் ஆக வேண்டும்.

இந்த விசாரணையில் எங்களை கூப்பிட்டாலும் நாங்கள் போகத் போகிறோம். திமுக மாதிரி பயந்து, ஒடுங்கி நடுங்குவார்கள் நாங்கள் இல்லை என்று அசால்ட்டாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தப்பு செய்யவில்லை என்றால் நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்… என்று திமுகவை விமர்சித்த அவர், மடியில் கணம் இல்லை என்றால் உனக்கு எதற்கு பயம்… தப்பு செய்தவன் நிச்சயம் தண்டனையை அனுபவித்தே தீருவான் என்று கூறினார்.