இவ்வாறு உள்ள பெண்கள் கர்ப்பம் தரித்தால் ஜெயில் தான்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
ஹங்கேரிய நாட்டில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க வேண்டும் புதிய சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.அதை பற்றி அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் கூறுகையில் வலதுசாரி தேசியவாதிகள் ஹங்கேரியில் முஸ்லீம்கள் குடியேறுவதை எதிர்த்து வருகின்றனர்.அதனால் ஹங்கேரியில் மக்கள் தொகையில் ஆண்டுக்கு 32,000 என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்து வருகின்றது.
அதனால் அந்நாட்டில் மக்கள் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக இளம் தம்பதியினருக்கு 10 மில்லியன் ஹங்கேரி பணம் வட்டி இல்லாமல் கடனாக வழங்கப்படும்.அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தவுடன் அந்த கடன் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில் மலேசியாவின் தெரெங்கானு மாநிலத்தில் புதிய சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.மேலும் அங்கு வசித்து வரும் முஸ்லிம் பெண்களை குறி வைத்து சில கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அந்த சட்டத்தின் அடிப்படையில் அங்கு வசிக்கும் பெண்கள் ஆண்களுக்கு நிகரான ஆடைகள் அணியக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் திருமணத்திற்கு முன்பு ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.மேலும் பெண்களுக்கு கடுமையான கசையடி மற்றும் அபராதத்துடன் அதிகபட்சமாக மூன்று வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்ப்ப்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய சட்டமானது பெண்கள் சுதந்திரம் மற்றும் சமத்துவம் போன்ற உரிமைகளை பறிப்பதாக அனைத்து மகளிர் சங்கம் மற்றும் பிற மனித உரிமைகள் குழுக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.அதற்கு இந்த சட்டமானது முஸ்லிம்களுக்கு அதிகளவு நன்மையை தரும் என அரசு தெரிவித்துள்ளது.