இதை பூசினால் வலியில்லாமல் உடலில் உள்ள மருக்கள் இலை போல் கொட்டி விடும்! இன்னைக்கே ட்ரை பண்ணுங்கள்!

Photo of author

By Divya

இதை பூசினால் வலியில்லாமல் உடலில் உள்ள மருக்கள் இலை போல் கொட்டி விடும்! இன்னைக்கே ட்ரை பண்ணுங்கள்!

உடலில் கை, கால், கழுத்து, முதுகு, அக்குள் பகுதியில் வரக் கூடிய மருக்களால் உடல் அழகு கெட்டுவிடும்.

இந்த மருக்களை வலி இல்லாமல் எளிமையாக அகற்ற உதவும் வீட்டு வைத்தியம்.

*அன்னாசி

ஒரு துண்டு அன்னாசி பழத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். இந்த பேஸ்டை மருக்கள் மீது தடவினால் அவை சில தினங்களில் கொட்டி விடும்.

*எலுமிச்சை சாறு + உப்பு

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிது உப்பு சேர்த்து கலக்கி மருக்கள் மீது பூசி வந்தால் அவை எளிதில் கொட்டிவிடும்.

*விளக்கெண்ணெய் + சோடா உப்பு

ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய்யில் சிறிது சோடா உப்பு சேர்த்து கலக்கி உடலில் உள்ள மருக்கள் மீது பூசி வந்தால் அவை விரைவில் கொட்டி விடும்.

*மஞ்சள் + குப்பைமேனி

உரலில் சிறிது குப்பைமேனி இலை போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அடுத்து அதில் சிறிது மஞ்சள் சேர்த்து கலக்கி மருக்கள் மீது தடவி வந்தால் அவை விரைவில் உதிர்ந்து விடும்.