இப்படி சுத்தம் செய்தால் உங்கள் ப்ரிட்ஜில் துர்நாற்றமே வராது!! ட்ரை பண்ணி பாருங்க!!

0
106
#image_title

இப்படி சுத்தம் செய்தால் உங்கள் ப்ரிட்ஜில் துர்நாற்றமே வராது!! ட்ரை பண்ணி பாருங்க!!

இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் வீடுகளில் பல வித சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.ப்ரிட்ஜ்,வாஷிங் மிஷின்,ஏசி,ஏர் கூலர் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் குறைந்த விலைகளில் கிடைப்பதினால் அனைவரும் வாங்கி பயன்படுத்த தொண்டாகி விட்டோம்.இந்த வகை பொருட்களால் அதிகளவு நேரம் மிச்சமாவதால் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இதை வாங்குவதை விட முறையாக பராமரிப்பது தான் முக்கியம்.இந்த பொருட்களை முறையாக பராமரிக்க தவறினால் இவை நம் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும்.அந்த வகையில் நம் சமையலறையில் அங்கம் வகிக்கும் பொருளான ப்ரிட்ஜை சுத்தமாக வைப்பது மிகவும் அவசியம்.இல்லையென்றால் உள்ளே வைத்திருக்கும் உணவுப் பொருள் பாய்சனாக மாறக் கூட வாய்ப்பு இருக்கிறது.

துர்நாற்றம் வீசாமல் இருக்க முறையாக ப்ரிட்ஜை சுத்தம் செய்வது எப்படி?

முதலில் ப்ரிட்ஜில் உள்ள காய்கறிகள்,பலன்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் எடுத்து வெளியில் வைக்கவும்.ப்ரிட்ஜை முறையாக சுத்தம் செய்தப்பின் பொருட்களை மீண்டும் வைத்துக் கொள்ளலாம்.

அதுமட்டும் இன்றி அழுகிய காய்கறிகள்,புளித்த பொருட்கள் ப்ரிட்ஜில் இருந்தால் அதை உடனடியாக அகற்றி விடுங்கள்.இல்லையென்றால் அந்த கெட்ட வாடை மற்ற உணவுப் பொருட்கள் மீதும் வீசத் தொடங்கி விடும்.

ப்ரிட்ஜில் வைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் நீக்கி விட்டு வெது வெதுப்பான தண்ணீரில் ஒரு காட்டன் துணியை நினைத்து கொண்டு ப்ரிட்ஜை சுத்தம் செய்யவும்.இதனால் ப்ரிட்ஜில் உள்ள அழுக்குகள்,கிருமிகள் அழிந்து விடும்.

அதேபோல் எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதை வைத்து ப்ரிட்ஜை முழுவதுமாக தேய்த்து சுத்தப்படுத்தலாம்.இவ்வாறு செய்வதன் மூலம் ப்ரிட்ஜில் உள்ள கெட்டை வாடை நீங்கும்.

அதேபோல் மாதத்திற்கு ஒரு முறை ப்ரிட்ஜ் கதவின் மேலுள்ள ரப்பர் கேஸ் கெட்டை கழட்டி சுத்தம் செய்வது மிகவும் முக்கியம்.இந்த ரப்பர் கேஸ் கெட்டை வினிகர் பயன்படுத்திக் கழுவினால் பிசுபிசுப்பு தன்மை இன்றி சுத்தமாக இருக்கும்.இப்படி செய்யத் தவறினால் மின்சார செலவு அதிகமாகும்.

6 மாதங்களுக்கு ஒருமுறை வாட்டர் பில்டரை மாற்றுவது மிகவும் முக்கியம்.அவ்வாறு செய்யத் தவறினால் அழுக்குகள் படிந்து நீர் வெளியேறாமல் அடைத்துக் கொள்ளும்.இதனால் ப்ரிட்ஜில் துர்நாற்றம் ஏற்பட தொடங்கி விரைவில் அவை பழுதாகி விடும்.

ப்ரிட்ஜ் சுத்தப்படுத்த சோப்பை உபயோகித்து விடாதீர்கள்.இதனால் ப்ரிட்ஜில் வைக்கவும் உணவுப் பொருட்கள் அனைத்தும் உண்ண தகுதியற்றவையாக மாறிவிடும்.

மாதத்திற்கு ஒரு முறை வெது வெதுப்பான நீர் அல்லது எலுமிச்சை சாறு கொண்டு ப்ரிட்ஜை செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.இதனால் ப்ரிட்ஜில் இருந்து எந்த வித துர்நாற்றமும் வீசாது.

Previous articleதினமும் காலையில் சீரகம் ஊறவைத்த தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!
Next articleநெஞ்சு சளி பிரச்சனை 5 நிமிடத்தில் தீர “கொள்ளு ரசம்” இப்படி செய்து குடிங்க!! 100% தீர்வு கிடைக்கும்!!