இதை செய்தால் இனி வீட்டில் ஒரு கரப்பான் பூச்சி நடமாட்டம் கூட இருக்காது..!! 100% பலன் உண்டு!

Photo of author

By Divya

இதை செய்தால் இனி வீட்டில் ஒரு கரப்பான் பூச்சி நடமாட்டம் கூட இருக்காது..!! 100% பலன் உண்டு!

வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டம் இருந்தால் நம் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டு விடும். காரணம் இவை சமையலறையில் உள்ள உணவுப் பொருட்களை உண்கின்றன. இதே உணவை நாம் சாப்பிடும் பொழுது உடலில் நுண்கிருமிகள் சென்று பல வித நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். வீட்டில் நடமாடும் கரப்பான் பூச்சி தொல்லைக்கு ஆரம்ப நிலையிலேயே முடிவுக்கு கட்டுவது நல்லது.

தேவையான பொருட்கள்:-

*அம்மோனியா – 2 கப்

*தண்ணீர் – 1 வாலி

செய்முறை…

ஒரு வாலி தண்ணீரில் அம்மோனியாவை கலந்து பாது பாத்ரூம், கிட்சன் சிங்க் என்று கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடங்களில் தெளிப்பதன் மூலம் அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.

மற்றொரு தீர்வு:-

*புதினா – 10 இலைகள்

*எலுமிச்சம் பழச்சாறு – 3 தேக்கரண்டி

செய்முறை…

10 புதினா தழைகளை உரலில் போட்டு நன்கு இடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து அதில் 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1/2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்வதன் மூலம் கரப்பான் பூச்சி நடமாட்டத்தை முற்றிலும் தடுத்து விடலாம்.