இப்படி சாப்பிட்டால் அல்சரை உடனடியாக விரட்டி அடிக்கலாம்!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!

0
438
#image_title

இப்படி சாப்பிட்டால் அல்சரை உடனடியாக விரட்டி அடிக்கலாம்!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!

நாம் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதனால் வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலம் இரைப்பையின் சுவர்களை அறித்து புண்ணாக்கிவிடும் அதைத்தான் அல்சர் என்று கூறுவோம்.

இது மட்டுமல்லாமல் மன அழுத்தம், மன வலி பிரச்சனைகள் இருந்தாலும் அல்சர் ஏற்படக்கூடும். காபி தினமும் பருகுவது மசாலா மற்றும் காரம் நிறைந்த உணவுப் பொருட்களை உண்பதாலும் அல்சர் ஏற்படக்கூடும்.

அல்சர் பிரச்சனையில் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

முதலில் காபி குடிப்பது நிறுத்த வேண்டும். அதை தினமும் பருகுவதால் அல்சர் அதிகமாகி வயிற்று வலி ஏற்படக்கூடும். மேலும் டீ, சாக்லேட், ஐஸ்கிரீம் முதலியவற்றையும் தவிர்க்க வேண்டும். அதிக காரம் அல்லது அதிக மசாலா நிறைந்த உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது. அல்சர் உள்ளவர்கள் பால் குடிப்பதையும் நிறுத்த வேண்டும்.

ஏனென்றால் பால் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை மேலும் அதிகரிக்கும். சோடா போன்ற பானங்களை தவிர்க்க வேண்டும். முக்கியமாக மதுபானங்களை குடிக்க கூடாது. அல்சரில் தொடர்ந்து மது குடித்தால் சிறுகுடலில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு வீக்கம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

அல்சரில் சாப்பிட வேண்டிய உணவுகள்:

தயிரில் நமக்கு நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் நிறைய உள்ளன. மேலும் இது உணவுப் பாதையில் இருக்கக்கூடிய கெட்ட பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுத்து அல்சரை குணமாக்கும். குறைந்தது வாரத்தில் மூன்று முறையாவது தயிரை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்து அதிகமாக உள்ள பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

காய்கறிகளில் அல்சரை குணப்படுத்தக்கூடிய அதிக சக்தி வாய்ந்தது முட்டைக்கோஸ். இதில் இருக்கக்கூடிய குளுட்டமைன் வயிற்றில் உள்ள அல்சர் புண்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது. மேலும் முள்ளங்கி, புடலங்காய், பூசணிக்காய், தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், நொங்கு, இளநீர் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ளவற்றை நாம் சேர்த்துக் கொண்டு வர அல்சர் பிரச்சனை விரைவில் குணமாகும்.

வாரத்தில் மூன்று முறை திராட்சையை சர்க்கரை இல்லாமல் ஜூஸ் போட்டு குடித்து வரலாம். புதினா ஜூஸும் அல்சருக்கு மிகவும் நல்லது.

அல்சரை குணப்படுத்தக்கூடிய முக்கிய உணவுகளில் ஒன்று மணத்தக்காளி. இதை ஜூஸ் ஆகவும், கூட்டாகவும், உணவாகவும் ஏதேனும் ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம். பாசிப்பருப்பை உணவில் சேர்த்துக் கொள்வதால் அல்சர் குணமாகும்.

Previous articleஅடேங்கப்பா!! இவ்வளவு பயன்களா? இந்த ஒரு செடி கிடைத்தால் தங்கம் கிடைத்த மாதிரி!!
Next article30 நாட்களில் உடல் எடையை இப்படியெல்லாம் அதிகரிக்க முடியும்னு தெரிஞ்சா?? உடனே ட்ரை பண்ணுவீங்க!!