இந்த கீரையை அரைத்து குடித்தால் கிட்னியில் உள்ள ஸ்டோன்கள் கரைந்து சிறுநீரில் வந்துவிடும்!!
நாம் உண்ணக் கூடிய அனைத்து கீரைகளும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது. இதில் சிறுகீரை கால்சியம்,துத்தநாகம்,தாமிரம் போன்ற சத்துக்களை கொண்டிருக்கிறது.
இந்த கீரையை குழம்பு,கடையல்,பொரியல் என்று எப்படி வேண்டுமாலும் செய்து சாப்பிடலாம்.இந்த கீரையின் தண்டில் ஜூஸ் செய்து குடித்து வந்தால் கிட்னியில் உள்ள கற்கள் அனைத்தும் கரைந்து வெளியில் வந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)சிறுகீரை தண்டு
2)பெரிய நெல்லிக்காய்
3)கேரட்
4)இஞ்சி துன்னு
5)புதினா இலை
செய்முறை:-
ஒரு கப் அளவு சிறுகீரையின் தண்டு பகுதியை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு கேரட்டை தோல் நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் இரண்டு பெரிய நெல்லிக்காயை விதை நீக்கி விட்டு அதன் சதை பற்றை நறுக்கி வைக்கவும்.அதேபோல் ஒரு துண்டு இஞ்சி எடுத்து தோல் நீக்கிக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு மிக்ஸி ஜார் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் சுத்தம் செய்து வைத்துள்ள சிறுகீரை தண்டுகளை நறுக்கி சேர்க்கவும்.அதன் பின்னர் பொடியாக நறுக்கிய கேரட்,நெல்லிக்காய்,இஞ்சி மற்றும் சிறிது புதினா இலை சேர்க்கவும்.
அதன் பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.இந்த ஜூஸை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடிக்கவும்.