பிரண்டை + நல்லெண்ணெய் இருந்தால் மூட்டு வலியை குணப்படுத்தும் மருந்து தயார்!!

Photo of author

By Divya

பிரண்டை + நல்லெண்ணெய் இருந்தால் மூட்டு வலியை குணப்படுத்தும் மருந்து தயார்!!

இன்றைய காலகட்டத்தில் மூட்டு வலி பாதிப்பு சிறு குழந்தைகளுக்கு கூட சாதாரணமாக ஏற்படுகிறது.இதை மருந்து,மாத்திரை இன்றி உணவு மூலம் சரி செய்து கொள்வது குறித்து சொல்லப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

*பிரண்டை – 1/2 கிலோ
*பூண்டு – 15
*மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
*புளி – ஒரு பெரிய எலுமிச்சம் பழ அளவு
*உப்பு – தேவையான அளவு
*பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
*நல்லெண்ணெய் – 1/4 கப்
*கடுகு – 1 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் 1/2 கிலோ பிரண்டை எடுத்து தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.பிறகு 15 பல் பூண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 4 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் உரித்த பூண்டு மற்றும் பிரண்டை துண்டுகளை போட்டு நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போடவும்.இதனோடு வர மிளகாய்,புளி சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு கடுகு போட்டு பொரிய விடவும்.

அதன் பிறகு அரைத்த பிரண்டை விழுதை சேர்த்து வதக்கி எடுக்கவும்.நல்லெண்ணெயில் பிரண்டை விழுது தனியாக பிரிந்து வந்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

இந்த பிரண்டை தொக்கை நன்கு ஆறவிட்டு ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.இதை தினமும் சூடான சாதம்,சப்பாத்தி போன்ற உணவுகளில் வைத்து சாப்பிட்டு வந்தால் மூட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள வலி குறையும்