உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த சாமி படங்கள் இருந்தால் உடனே எடுத்து விடுங்கள்!
அனைவரது வீட்டிலும் கட்டாயம் பூஜை அறை இருக்கும். பூஜை அறையில் நாம் விநாயகர், முருகன், சரஸ்வதி உள்ளிட்ட சாமி படங்களை வைத்து வணங்கி வருகிறோம். ஆனால் பூஜை அறையில் வைத்து வணங்கக் கூடாத தெய்வங்கள் உள்ளன. அந்த வகையில் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடக் கூடாத தெய்வங்கள் பற்றிய விவரங்கள் இதோ.
முதலில் வீட்டு பூஜை அறையில் உடைந்த சாமி சிலைகள் இருக்கக் கூடாது. உடைந்த சாமி படங்கள் இருக்கக் கூடாது.
சனீஸ்வர பகவானின் படங்கள் ஒருபோதும் வீட்டில் இருக்கக் கூடாது. மொட்டை அல்லது கோவனம் கட்டிய படி உள்ள கடவுளின் படங்கள் வீட்டில் இருக்கக் கூடாது.
உக்கிர தெய்வமான காளியின் படங்கள் பூஜை அறையில் இருக்கக் கூடாது. பூஜை அறையில் முருகன் படம் இருந்தால் சிறப்பு. ஆனால் தலைக்கு மேல் வேல் இருக்கும் முருகன் படம் இருக்கக் கூடாது.
தலைவிரி கோலத்தில் உள்ள சாமியின் படங்கள் பூஜை அறையில் இருக்கக் கூடாது. நடராஜரின் உருவப்படம் வீட்டில் இருக்கக் கூடாது.
நவக்கிரகங்களின் உருவப்படம் வீட்டு பூஜை அறையில் இருக்ககூடாது. ஐயப்பன் படங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கக் கூடாது.