பனிக்காலத்தில் உதட்டை மிருதுவாக வைக்க உதவும் “நேச்சுரல் லிப் பாம்” – தயார் செய்வது எப்படி?

0
188
#image_title

பனிக்காலத்தில் உதட்டை மிருதுவாக வைக்க உதவும் “நேச்சுரல் லிப் பாம்” – தயார் செய்வது எப்படி?

பனிக்காலமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு சிலருக்கு உதடுகள் எப்பொழுதும் வறட்சியாக தான் இருக்கும். இந்த வறட்சியால் உதடு தன் இயற்கை அழகை இழந்து பொலிவற்று காணப்படும்.

இந்த பிரச்சனையை சரி செய்ய இயற்கை முறையில் லிப் தயாரித்து உதடுகளுக்கு பயன்படுத்தலாம். இதனால் உதடு காயாமல் இருப்பதோடு, ஒருவித அழகையும் பெறும்.

பீட்ரூட் லிப் பாம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*பீட்ரூட்

*நெய்

*தேன்

செய்முறை…

ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் அதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.

இந்த பீட்ரூட் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து பீட்ரூட் சாற்றை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

சுண்டி வந்ததும் 1 ஸ்பூன் நெய் மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து காய்ச்சி ஆற விடவும்.

பின்னர் இதை டப்பாவில் ஊற்றி மூடி போட்டு ஃபீரிசரில் 1 மணி நேரம் வரை வைத்திருந்து பின்னர் எடுத்து உதட்டிற்கு பயன்படுத்தவும். லிப் பாம் மீண்டும் திரவ வடிவத்திற்கு வந்து விட்டால் ஃபீரிசரில் வைத்து பயன்படுத்தலாம். இந்த லிப் பாம் உதடுகளை மிருதுவக்குவதோடு, உதட்டின் நிறத்தையும் மாற்றும் தன்மை கொண்டது.

கேரட் லிப் பாம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*கேரட்

*நெய்

*தேன்

செய்முறை…

ஒரு கேரட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் அதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.

கேரட் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அரைத்த கேரட் சாற்றை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.