முருங்கை பருப்பு பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் ஆயுசுக்கும் மருத்துவரை அணுக தேவையில்லை!!

Photo of author

By Divya

முருங்கை பருப்பு பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் ஆயுசுக்கும் மருத்துவரை அணுக தேவையில்லை!!

முருங்கை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய கீரை,முருங்கை காய்,முருங்கை பிசின்,முருங்கை விதை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை.இவை ஆண்,பெண் அனைவருக்கும் கடவுள் கொடுத்த ஒரு வரப் பிரசாதம் ஆகும்.

முருங்கை என்றால் முதலில் நினைவிற்கு வருவது ஆண்மை குறைபாட்டை போக்கும் அருமருந்து என்பது தான்.முருங்கை காயில் உள்ள விதையை காய வைத்து அதனுள் இருக்கக் கூடிய விதையை தனியாக பிரித்து எடுக்கவும்.இதை வெயிலில் நன்கு உலர்த்தி அதனுள் இருக்கக் கூடிய பருப்பை மட்டும் தனியாக எடுத்து லேசாக வறுக்கவும்.250 கிராம் அளவு பருப்பு எடுத்துக் கொண்டால் போதுமானது.

இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.இந்த முருங்கை விதை பருப்பு பொடியை சூடான நீர் அல்லது பாலில் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

1)ஆண்களுக்கு விந்து முந்துதல்,விந்தணு குறைபாடு பிரச்சனை சரியாகும்.
2)பெண்களுக்கு கருப்பை தொடர்பான பாதிப்புகள் நீங்கும்.
3)முருங்கை பருப்பு நார்ச்சத்து நிறைந்த பொருள்.இவை செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
4)இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
5)உடலுக்கு தேவையான இரும்பு சத்தை வழங்குகிறது.
6)உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது.
7)புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
8)இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
9)உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.
10)சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.