நீரில் இந்த இரண்டு பொருளை போட்டு காய்ச்சி குடித்தால் வயிற்றில் தேங்கி கிடந்த மலம் வாழைப்பழம் போல் வழுக்கி கொண்டு வெளியேறும்!!
மலக் குடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் ஆரோக்கியமான முறையில் வெளியேற வேண்டும் என்றால் இந்த வீட்டு வைத்திய குறிப்பை தவறாமல் செய்து பார்க்கவும்.
தேவையான பொருட்கள்:-
1)தண்ணீர்
2)நெய்
3)உலர் திராட்சை
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் 5 உலர் திராட்சை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற வைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் ஒரு பாத்திரம் எடுத்து 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.இதை அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும்.
அதன் பின்னர் ஊற வைத்த உலர் திராட்சை தண்ணீரை ஊற்றி மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு சூடாக்கி அடுப்பை அணைக்க வேண்டும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி 5 துளி நெய் சேர்த்து குடித்தால் ஒரு மணி நேரத்தில் மலக் குடல் பகுதியில் தேங்கி கிடந்த தேவையற்ற கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.
உலர் திராட்சை ஒரு சிறந்த மலமிளக்கி ஆகும்.அதுமட்டும் இன்றி சூடான நீரில் நெய் சேர்த்து குடித்தால் வயிறு முழுமையாக சுத்தமாகும்.
வீட்டுவைத்திய முறைப்படி மலச்சிக்கலை குணப்படுத்துவதில் நெய் முக்கிய பங்கு வகிக்கிறது.இரவு நேரத்தில் இது போன்று செய்து குடித்தால் அதிகாலை நேரத்தில் வயிற்றில் உள்ள மலக் கழிவுகள் வெளியேறி குடல் ஆரோக்கியமாக இருக்கும்.