இந்த தீபத்தை போட்டால்.. உங்கள் வீட்டிற்கு குலதெய்வம் மனம் இறங்கி வருவார்..!

Photo of author

By Divya

இந்த தீபத்தை போட்டால்.. உங்கள் வீட்டிற்கு குலதெய்வம் மனம் இறங்கி வருவார்..!

குலதெய்வத்தின் அருள், ஆசி இருந்தால் மட்டுமே நம் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். ஒருவேளை நீங்கள் குலதெய்வ வழிபாட்டை மறந்தாலோ.. குலதெய்வம் கோபம் கொள்ளும் அளவிற்கு நடந்து கொண்டாலோ.. நீங்கள் குலதெய்வத்தின் கோபத்திற்கு ஆளாகி விடுவீர்கள்.

இவ்வாறு இருக்க குலதெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது.. குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்க வீட்டில் ஒரு எளிய பரிகாரம் செய்யுங்கள்.

இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

அதற்கு முதலில் தலைக்கு குளித்து விட்டு வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து குலதெய்வ படத்திற்கு மஞ்சள், குங்குமத்தில் பொட்டு வைக்கவும். அடுத்து வாசனையான மலர்களை கொண்டு குலதெய்வ படத்தை அலங்காரம் செய்யவும்.

பிறகு குலதெய்வ படத்திற்கு முன்னர் ஒரு மண் சிறிய மண் பானை வைத்து எச்சில் படாத தண்ணீரை ஊற்றவும். அடுத்து அதில் 1 துண்டு பச்சை கற்பூரம் மற்றும் 1 ஏலக்காய் போடவும். இந்த மண் பானைக்கு முன்னர் ஒரு பித்தளை தட்டு வைத்து ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றவும். பிறகு குலதெய்வம் வீட்டிற்கு வர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வந்தால் குலதெய்வம் வீட்டில் நிரந்தரமாக தங்கிவிடும்.