ஒரு வாரத்தில் 10 கிலோ உடல் எடை குறைய இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!

0
112
#image_title

ஒரு வாரத்தில் 10 கிலோ உடல் எடை குறைய இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!

உடல் எடையை எளிதில் அதிகரிக்க கூடிய உணவை உண்பதால் உயிருக்கு ஆபத்தான நோய் பாதிப்புகள் சாதாரணமாக ஏற்பட்டு விடுகிறது.

உடல் எடையை குறைக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிகிறது என்று வருந்தும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கத்தை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சம் பழம் – 2
2)இஞ்சி – 1 துண்டு
3)பட்டை – 1
4)கருப்பு மிளகு – 1/2 தேக்கரண்டி
5)தேன் – தேவையான அளவு

செய்முறை:-

ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாற்றை தனியாக பிழிந்து வைத்துக் கொள்ளவும். மற்றொரு எலுமிச்சம் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் நறுக்கிய எலுமிச்சை துண்டுகளை போட்டு கொதிக்க விடவும்.

பிறகு அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும். தொடர்ந்து ஒரு துண்டு பட்டை மற்றும் 1/4 தேக்கரண்டி கருப்பு மிளகு சேர்த்து கொதிக்க விடவும்.

அடுத்து ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் போட்டு கொதிக்க விடவும்.

இவை அனைத்தும் நன்கு கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்து கடாயை ஒரு மூடி போட்டு 5 நிமிடங்களுக்கு மூடவும்.

பிறகு ஒரு கிளாஸில் தயாரித்து ஆறவைத்துள்ள எலுமிச்சம் பானத்தை ஊற்றி தேவையான அளவு தேன் கலந்து குடிக்கவும்.

காலையில் வெறும் வயிற்றில் மற்றும் இரவு உணவிற்கு பின்னர் இந்த பானத்தை குடித்து வந்தால் உடலில் தேங்கி கிடக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து விடும்.