கோயிலில் கடவுளை அலங்கரிக்கும் அபிஷேகப் பொருட்கள் மற்றும் அதன் பலன்கள்!

0
120
#image_title

கோயிலில் கடவுளை அலங்கரிக்கும் அபிஷேகப் பொருட்கள் மற்றும் அதன் பலன்கள்!

கடவுளை அலங்கரிப்பதற்கு முன்னர் பழம், பால், நெய் உள்ளிட்ட தெய்வீக பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்வது வழக்கம். இவ்வாறு அபிஷேகம் செய்ய என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.. அதனால் நமக்கு கிடைக்க கூடிய பலன்கள் பற்றி அறிவோம்.

கோயிலுக்கு அபிஷேகப் பொருட்களை வாங்கி கொடுப்பதற்கு முன்னர் அதன் பலன்களை அறிந்து கொண்டு கொடுப்பது சிறப்பு.

மங்களகரமான மஞ்சளை வைத்து அபிஷேகம் செய்வதால் நமக்கு அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். இந்த மஞ்சள் பொடியை கடவுளுக்கு அபிஷேகப் பொருளாக கொடுப்பது மிகவும் நல்லது.

அடுத்து திருமஞ்சன பொடி ஒரு தெய்வ சக்தி நிறைந்தவை. இதை வைத்து அபிஷேகம் செய்யும் பொழுது தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

பஞ்சாமிர்தத்தை அபிஷேகத்திற்கு பயன்படுத்தும் பொழுது செல்வ வளம் பெருகும். பால் கொண்டு அபிஷேகம் செய்வதினால் ஆயுள் கூடும். கரும்புச்ச்சாறு கொண்டு அபிஷேகம் செய்யும் பொழுது உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சந்தனாதி தைலத்தை கொண்டு அபிஷேகம் செய்வதினால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். தேன் கொண்டு அபிஷேகம் செய்வதினால் நினைத்த காரியங்களில் வெற்றி உண்டாகும்.

ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி பழத்தில் அபிஷேகம் செய்தால் துன்பங்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும்.